அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி சார்பில் செயற்கை கண் சார்ந்த செயல்முறை பயிற்சி
சேலம்: விநாயகா மிஷினின் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட, சேலம் விம்ஸ் வளாகம் புதுச்சேரி மற்றும் சென்னை பனையூரில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளின், கண் ஒளியியல் பிரிவின் மூலம் செயற்கை கண் சார்ந்த செயல்முறை பயிற்சி, கல்லுாரி வளாகத்தில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது.கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளர் பேராசிரியை தமிழ் சுடர் வரவேற்றார். டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சென்னை ஐரிஸ் பர்பெக்ட் முக தடை மற்றும் செயற்கை கண் மறுவாழ்வு மருத்துவ மைய நிறுவனர், கண் ஒளியியலாளர் மற்றும் செயற்கைக்கான நிபுணர் பிரியா பாலசுப்பிரமணியன் மற்றும் சென்னை அரசு கண் ஒளியியல் கல்லுாரி மூத்த விரிவுரையாளர் சதீஷ்குமார் ஆகியோர், செயற்கை கண் தயாரித்தல் மற்றும் அதை சார்ந்த பல்வேறு நேரடி செயல்முறை பயிற்சி அளித்தனர்.பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் மருத்துவமனைகளை சார்ந்த கண் ஒளியியலாளர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட விளக்க காட்சி போட்டி, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சென்னை கல்லுாரியின் கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளர் பானு நன்றி கூறினார்.ஏற்பாடுகளை கண்ணொளியியல் பிரிவின் பொறுப்பாளர்கள் பேராசிரியை தமிழ்சுடர், வெண்ணிலா மற்றும் பானு ஆகியோர் செய்திருந்தனர்.