பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு - இணையதளத்தில் ஹால் டிக்கெட்
சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர், தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து, இன்று(செப்டம்பர் 2ம் தேதி) ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுத் துறை இணை இயக்குனர், ராமராஜன் அறிவிப்பு:பத்தாம் வகுப்பு தனித்தேர்வு விரைவில் துவங்க உள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்ய வேண்டும். தத்கல் திட்டம், விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.