சுத்தம், சுகாதாரத்தை வலியுறுத்தி நடந்த தூய்மை பாரதம், தூய்மை பள்ளி போட்டிகள்
ராமநாதபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சுத்தம், சுகாதாரத்தை வலியுறுத்தி தூய்மை பாரதம், தூய்மை பள்ளி போட்டிகள் நடந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 வட்டார அளவிலான போட்டிகளில் 1,304 பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், மாவட்ட அளவிலான போட்டிக்கு 172 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் பி.எட்., கல்லூரியில் நடந்த போட்டிக்கு கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பத்மாவதி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். போட்டிகளில் வென்ற ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் 3 பரிசுத்தொகை ரூ.700, ரூ.600, ரூ.350, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் 3 பரிசு தொகை ரூ.1000, ரூ.800, ரூ.700க்கான காசோலை வழங்கப்பட உள்ளது.