உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வுக்கு காங்., - இ.பி.எஸ்.,சே காரணம்; அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில், &'நீட்&' தேர்வு நடைபெறுவதற்கு, காங்கிரஸ் மற்றும் இ.பி.எஸ்., தான் காரணம்,&'&' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, முழு கவச உடை அணிந்து, கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் போது, தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை தொடர்ந்து, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கூடுதலாக, 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டன. மேலும், ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்து, 70 இடங்களிலும், சமூக பொறுப்பு நிதியின் கீழ், 40 இடங்கள் என, மொத்தம் 110 அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில், 20 இடங்களில் பணிகள் முடிந்துள்ளன. இவை, மூன்றாம் அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை. தமிழகத்தில் கொரோனா தொற்று முழுவதுமாக முடியவில்லை. நேற்று முன்தினம், 2,079 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறைவான எண்ணிக்கை இல்லை. மூன்றாவது அலை வரும் என, தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.எனவே, பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து, இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 32 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இதில், 3.42 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து, தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.நீட் விவகாரத்தில், தமிழகத்தை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும், நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அதன்பின், ஆட்சிக்கு வந்த இ.பி.எஸ்., தான், இந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டார். நான்கு ஆண்டுகளாக, தமிழகத்துக்கு நீட் தேர்வு வர உதவி செய்தவர் இ.பி.எஸ்., தான். இந்த தேர்வு காரணமாக, 13 பேர் இறந்துள்ளனர்.கிராமப்புற மாணவர்களுக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, தி.மு.க., கோரிக்கை வைத்தது. அப்போது தான், வேறு வழியில்லாமல் 7.5 சதவீதத்துக்கு சம்மதித்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, மருத்துவ ஊரக பணிகள் இயக்குனர் குருநாதன், இ.எஸ்.ஐ., மருத்துவமனை முதல்வர் சவுமியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்