அரசு பள்ளியில் அ.தி.மு.க., பேனர் ஊராட்சி தலைவர் மீது பி.டி.ஓ., புகார்
ஆர்.கே.பேட்டை: அரசு தொடக்க பள்ளி கட்டடத்தில், அ.தி.மு.க., கட்சி பேனரை வைத்திருந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது வட்டார வளர்ச்சி அலுவலர், போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன நாகபூண்டி ஊராட்சியில் புதிதாக அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் மீது, அ.தி.மு.க., கட்சி அலுவலகம் என்ற பேனரை, சின்ன நாகபூண்டி ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் வைத்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அரசு பள்ளியில், அ.தி.மு.க., அலுவலகம் என பேனர் வைத்துள்ளது தொடர்பாக, வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.