உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் தேர்வுகள் துவக்கம்; மாநில அளவில் வினாத்தாள் தொகுப்பு

உடுமலை: அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுகள் நேற்று துவங்கியது.அரசுப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஏப்., மாத இறுதியில் மூன்றாம் பருவத்தேர்வு, முழுஆண்டுத்தேர்வுகள் நடக்கிறது.நடப்பு கல்வியாண்டில் லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி, மாணவர்களுக்கு முன்னதாகவே தேர்வுகளை நடத்தி, விடுமுறை விடுவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்று அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான தேர்வுகள் துவங்கியது.நடப்பாண்டில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான தேர்வு வினாத்தாள்களும், மாநில அளவில் பொதுவாக தொகுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு அந்த வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வு துவங்கியது.விடுமுறையில் குழப்பம்தேர்தல் நடப்பதால் அனைத்து பள்ளிகளையும் ஏப்., 12ம் தேதியுடன் நிறைவு செய்வதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், ரம்ஜான் பண்டிகை வருவதால், நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அன்று நடக்கும் தேர்வுகள், 22, 23ம் தேதிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் தற்போது மாணவர்கள் அதுவரை பள்ளிக்கு வர வேண்டுமா அல்லது தேர்வுக்கு மட்டுமே் வர வேண்டுமா என்பது குறித்து, முறையான தகவல் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்