மாணவிகள் கழிப்பறை சுத்தம் செய்த விவகாரம்: கோவை கலெக்டரிடம் மனு
கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, குமாரபாளையம் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது.இச்சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என, கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை சார்பில் கோவை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றபோதும், கலெக்டர் வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பேரவையின் மாநில பொது செயலாளர் இளங்கோவன், நிறுவன தலைவர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.