அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
விழுப்புரம் : பெரும்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ரோட்டரி சங்கம் சார்பில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் ராணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சிவமூர்த்தி வரவேற்றார். விழுப்புரம் ரோட்டரி சங்கத் தலைவர் துரைராஜ் மாணவர்களுக்கு பட்டம் இதழ்களை வழங்கி பேசுகையில், தினமலர் நாளிதழ் பல்வேறு மக்கள் சேவையாற்றி வருவதோடு, மாணவர்களுக்கு அறிவு களஞ்சியமாக விளங்கும், பட்டம் இதழ் வழங்குவது சிறப்பு என்றார்.விழாவில் ரோட்டரி சங்க செயலாளர் வினோத், பொருளாளர் சிவக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.மூங்கில்துறைப்பட்டுஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் மணி தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியர் செந்தில் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விஜய் ஆனந்த் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கி பேசுகையில், தினமலர் - பட்டம் இதழ் படித்தால் நீங்கள் பட்டம் வெல்வது உறுதி. அது மட்டுமில்லாமல் உங்கள் அறிவு திறனை மென்மேலும் வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும் என்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரை வேலன் நன்றி கூறினார்.