உள்ளூர் செய்திகள்

அரசுப்பள்ளி ஆசிரியர் மீது புகார் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த விட்டம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் வேலுச்சாமி, 51. இவர், மாணவர்களிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவதாக கூறி, அப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், ஏழு மாணவர்கள், தலைமை ஆசிரியர் பாஸ்கரனிடம் புகாரளித்தனர்.இதுகுறித்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, மொபைல் போன் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) விஜயன், குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜோதிகண்மணி ஆகியோர் தலைமையில், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அறிக்கை, நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்படும் என, விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்