பர்கூர் அரசு பெண்கள் பள்ளியில் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் டவுன் பஞ்.,க்குட்பட்ட திருப்பத்துார், வாணியம்பாடி இணைப்பு சாலை அருகில், பர்கூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 9.25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.ரூ.14 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணி துவக்கம்தொடர்ந்து, பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையையும் துவக்கி வைத்தார். பர்கூரில் தி.மு.க., 75வது பவள விழா மற்றும் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சி கொடியை ஏற்றி வைத்த மதியழகன் எம்.எல்.ஏ., பர்கூர் டவுன் பஞ்., அலுவலகத்தில் நடந்த விழாவில் டவுன் பஞ்., ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.