உள்ளூர் செய்திகள்

கனமழை கொட்டி தீர்த்தது; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: கனமழை காரணமாக ஊட்டி, கூடலூர், கோத்தகிரி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.,02) நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா விடுமுறை அறிவித்துள்ளார்.பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. சில இடங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று (டிச.,02) எங்கு எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:* கனமழை காரணமாக ஊட்டி, கூடலூர், கோத்தகிரி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.,02) நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா விடுமுறை அறிவித்துள்ளார்.* நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகள்விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு மட்டும்!வேலூர், திருப்பத்தூர்,தருமபுரி,ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்