உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம்; பள்ளிக்கு வராத பொறுப்பாசிரியர்களிடம் விளக்கம் கேட்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு கலெக்டர் ஜெயசீலன் டிச. 9 காலை 8:30 மணிக்கு ஆய்வு சென்ற போது, காலை உணவு திட்டத்தில் மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பொறுப்பாசிரியர்கள் வராததால் இருவரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.விருதுநகர் அருகே சந்திரகிரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியை டிச. 9 காலை 8:30 மணிக்கு கலெக்டர் ஆய்வு செய்தார். மாணவர்களில் பாதி பேர் காலை உணவு சாப்பிட்டு முடித்திருந்தனர்.அப்போது மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி கலெக்டர் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.பள்ளியில் தலைமையாசிரியர், பொறுப்பாசிரியர் ஆகியோர் பள்ளியில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. காலை உணவுத்திட்டத்தில் மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்பு தலைமையாசிரியர், பொறுப்பாசிரியர் உணவின் தரம், சுவை குறித்து ஆய்வு செய்த பிறகு உணவு வழங்க வேண்டும்.தலைமையாசிரியர், பொறுப்பாசிரியர் உரிய நேரத்தில் வராத காரணத்தால் காலை உணவை மாணவர்களுக்கு பொறுப்பாளரும் சமையலரும் பரிமாறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று, நேரத்திற்கு வராத தலைமையாசிரியர், பொறுப்பாசிரியரிடம் வராதது குறித்து விளக்கம் கேட்டு தொடக்கக்கல்வி அலுவலர் கடிதம் அனுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்