உள்ளூர் செய்திகள்

மாதா நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதல் இடம்

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாதா நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி நமீதா 625க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.கர்நாடகாவில் கடந்த 2ம் தேதி வெளியான, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளில் 22 மாணவ - மாணவியர் 625க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.இவர்களில் பெங்களூரு நாகரபாவியில் உள்ள மாதா நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி நமீதாவும் ஒருவர். இந்த பள்ளியின் மாணவர் ஹர்ஷவர்தன் மாநில அளவில் 2வது இடமும்; மாணவி நேஹா மாநில அளவில் 4வது இடமும் பிடித்தனர்.பள்ளியில் படித்த 99 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் 45 பேர்; 80 சதவீதத்திற்கு மேல் 45 பேர்; முதல் வகுப்பில் 36 பேர்; இரண்டாம் வகுப்பில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அனைத்து மாணவ - மாணவியருக்கும் பள்ளியின் தலைவர் மல்லிகார்ஜுனய்யா பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்