ஆர்ஐஎம்சி நுழைவுத் தேர்வு முடிவு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
சென்னை: ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி (ஆர்ஐஎம்சி)- டேராடூனில் 2026 ஜனவரிக்கான மாணவர் சேர்க்கைக்கான தகுதி எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் 1-ம் தேதி நடைபெற்றது.ஆர்ஐஎம்சி இணையதளம் பராமரிப்பு காரணமாக தற்போது செயலிழந்த நிலையில் உள்ளது. எனவே, அந்தத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிட முடியவில்லை.இதனைத் தொடர்ந்து, ஆர்ஐஎம்சி டேராடூனிலிருந்து பெறப்பட்ட தேர்வு முடிவுகள், தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.