உள்ளூர் செய்திகள்

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் மொபைல் போன் பழுது நீக்க பயிற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தொழில்முனைவோர் பயிற்சிகள் வகுப்புகள் நடத்தப்படுகிறது.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் மொபைல்போன் பழுதுபார்ப்பு, சி.சி.டி.வி., கேமரா, பாதுகாப்பு அலாரம் மற்றும் புகை கண்டுபிடிப்பான் பொருத்துதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.மொபைல்போன் பழுதுபார்ப்பு மற்றும் சேவைகள் பயிற்சி 30 நாட்கள் நடக்கிறது. சி.சி.டி.வி., கேமரா, பாதுகாப்பு அலாரம் மற்றும் புகை கண்டுபிடிப்பான் பொருத்துதல் பயிற்சி 13 நாட்கள் நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாடூர் சுங்கச்சாவடி அருகில், பெரியார் நகர், முத்தையா இல்லம் எனும் முகவரியில், இதற்கான நேர்காணல் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 04151-225544 மற்றும் 9113917264 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.பயிற்சி காலங்களில் தேநீர், உணவு வழங்கப்படும். வங்கி கடன்கள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். 18 முதல் 45 வயதினர் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்