உள்ளூர் செய்திகள்

டில்லியில் களைகட்டியது ஏ.ஐ., மாநாடு: பாரத மண்டபத்தில் குவிந்த உலக தலைவர்கள்

புதுடில்லி: டில்லியில் பாரத மண்டபத்தில் நடக்கும் ஏ.ஐ., மாநாட்டில் பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் குவிந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.இந்தாண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்துகிறது. பிப்.,16 முதல் 20 வரை டில்லி பாரத மண்டபத்தில் நடக்கும் இம்மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் நேற்று நடந்த மாநாட்டில்பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கேஇலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகேகிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ்கயானா துணை அதிபர் பாரத் ஜக்தேவ்பொலிவியா துணை அதிபர் எட்மண்ட் லாரா மோன்டானோஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பெரேஜ்ஸ்லோவோகியா குடியரசு அதிபர் பீட்டர் பெலேகிரினிகஜகஸ்தான் பிரதமர் ஓல்ஜஹாஸ் பெக்டேனோவ்பின்லாந்து பிரதமர் பெட்ட்டேரி ஓர்போாஎஸ்டோனியா பிரதமர் அலார் காரிஸ்மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திரா ராம்கூலம்சிசெல்ஸ் துணை அதிபர் செபாஸ்டியன் பிளாய்நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப்குரோஷியா பிரதமர் ஆன்ட்ரெஸ் பிளென்கோவிக்ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனடியோ குட்டரெஸ்ஐ.எம்.எப்., தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பிறகு பாரத மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கலை நிகழ்ச்சிகளை தலைவர்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்