நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது காமராஜர் பல்கலை பதிவாளர் பேச்சு
உத்தமபாளையம்: நாட்டின் வளர்ச்சி மற்றும் சமுதாய முன்னேற்றம் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது என பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் முத்தையா பேசினார்.உத்தமபாளையம் கருத்தரவுத்தர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.கல்லுாரி தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் எச். முகமது மீரான் வரவேற்றார்.மதுரை காமராஜர் பல்கலை கழக பதிவாளர் முத்தையா பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது : இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரைகள் கூற வேண்டிய அவசியம் இல்லை.அவர்கள் அனைத்து விஷயங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியால் உலகம் சுருங்கிவிட்டது.இருந்த போதும் நாட்டின் வளர்ச்சி மற்றும் சமுதாய முன்னேற்றம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்றார். விழாவில் 695 பேர் இளங்கலை பட்டம், 153 பேர்கள் முதுகலை பட்டம் பெற்றனர்.