உள்ளூர் செய்திகள்

மருத்துவப் பயிற்சிப் படிப்புகள்: அப்போலோ - இக்னோ ஒப்பந்தம்

அப்போலோ மருத்துவமனையின் 25வது ஆண்டு விழாவையொட்டி சென்னையில் அந்த நிறுவனத்தின் தலைவர் பிரதாப் சி. ரெட்டியும் இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளையும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் டெக்னிஷியன், மெடிக்கல் அசிஸ்டெண்ட்ஷிப், ஹெல்த் மேனேஜ்மெண்ட் அண்ட் டயாலிசிஸ் உள்பட 45 படிப்புகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்புகள் ஆன்லைன் மற்றும் தொலைநிலைக் கல்வி மூலம் வழங்கப்படும். வரும் ஜனவரியில் இந்தப் படிப்புகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நமக்கு டாக்டர்கள், நர்சுகள் எண்ணிக்கையை இரண்டு மடங்காக ஆக்க வேண்டும். மருந்தியல் துறையினரின் எண்ணிக்கையை 10 மடங்கு அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதுஎன்று பிரதாப் சி. ரெட்டி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்