உள்ளூர் செய்திகள்

காணாமல் போன இந்திய மாணவர்: அமெரிக்காவில் தேடும் பணி மும்முரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில், காணாமல் போன இந்திய மாணவரை தேடும் பணியில், எப்.பி.ஐ., தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின், ரோட் தீவு மாகாணத்தின், புரொவிடன்ஸ் நகரில் வசிக்கும் சுனில் திரிபாதி, 22, பிரவுன் பல்கலைக் கழகத்தில், தத்துவம் பயின்று வருகிறார். கடந்த, 16ம் தேதி முதல், அவரை காணவில்லை என, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து, புரொவிடன்ஸ் நகர போலீசார், சுனிலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். "சுனில், மென்மையான, கூச்ச சுபாவம் கொண்ட இளைஞர். பல்கலைக்கழகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்ட பின், மன உளைச்சல் கொண்டவராக காணப்பட்டார். அவர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்" என, அவரது குடும்பத்தினர், கவலையுடன் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே, அவர், தன் மொபைல் போன், கிரெடிட் கார்டு மற்றும் அடையாள அட்டையை, அறையிலேயே விட்டுச் சென்றுள்ளார்; தற்கொலை கடிதம் அவரது அறையில், கிடந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.,யும், அவரை தேடும் பணியில், ஈடுபட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்