உள்ளூர் செய்திகள்

கல்வியின் அருமையை உணர்ந்த கைதிகள்: சிறை வளாகத்தில் தேர்வு எழுதினர்

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ள கைதிகள் படித்திருந்தாலும் தேர்வு எழுத தேர்வு மையங்களுக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட வேண்டிய நிலை இருந்தது. தற்போது, தமிழகத்தில் கல்வித்துறை அனுமதியுடன் சிறை வளாகத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு கைதிகள் தேர்வு எழுத அனுமதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை, வேலூர் சிறைகளில், மொத்தம் 76 கைதிகள் டிச. 8ம் தேதி, எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினர். புழல் சிறையில், 15 ஆண் கைதிகளும், 11 பெண் கைதிகளும் தேர்வு எழுதினர். இந்த தேர்வு ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. சிறைத்துறை இயக்குனர் நட்ராஜ், புழல் சிறையில் கைதிகள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார். சிறை கண்காணிப்பாளர்கள் ராஜலட்சுமியும்,  விஜயலட்சுமி பண்டிட்டும் உடனிருந்தனர். நிருபர்களிடம் டி.ஜி.பி.,நடராஜ் கூறியதாவது:சிறையில் நுõலகம், தொழில்கல்வி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. கல்வித்துறையின் அனுமதி பெற்று எஸ்.எஸ்.எல்.சி.,மற்றும் பிளஸ்  2 தேர்வுகளும் சிறையில் நடத்தப்படும். கைதிகள் தங்கள் குடும்பதினருடன் விழாக்களை கொண்டாடும் வகையில் சமத்துவ தீபாவளி, சிறை வளாகத்தில்  கொண்டாடப்பட்டது. இதே போல கிறித்துமஸ், பொங்கல் போன்றவையும் ஆயுள் கைதிகள் தங்கள் குடும்பத்தோடு கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். கோவை சிறையில், விசைத்தறி மூலம் கைதிகள் தங்கள் சீருடைகளையும், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான சீருடைகளையும் உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு டி.ஜி.பி., நடராஜ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்