வகுப்பறை கல்வியை விட இ-லேர்னிங் கல்வி முறை எளிதானது!
‘ஆசிரியர்கள் கற்பிக்க மாணவர்கள் கற்கும் பழமையான கல்விமுறையில் இருந்து உயர்ந்து, கற்பித்தல் மற்றும் கற்றுக்கொள்ளல் என்ற இரண்டு நிலையை இ-லேர்னிங் கொண்டிருக்கிறது. ஆனால், இ-லேர்னிங் முறை குறைவாகவே மதிப்பிடப்பிடுகிறது’ என்று இ-லேர்னிங் குறித்து ஆய்வு மேற்கொண்ட இல்லினோய்ஸ் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் கரோலின் ஹேதோர்ன்த்வெய்தே தெரிவிக்கிறார். விரிவுரை, வீட்டு பாடம், வினாடி வினா, தேர்வு போன்ற அனைத்துமே இணையதள வழிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இ-லேர்னிங் என்பது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கற்றல். எளியதும், உடனடி கருத்து பரிமாற்றத்திற்கு சாத்தியமும், அதிக தேவையையும் கொண்டுள்ள இம்முறை கல்வியால் உலகமே எளிமையாகியுள்ளது. இன்டர்நெட் பயனாளிகள் அதிகரித்து வருவது, இ-லேர்னிங் முறை அதிகரிப்பதையே குறிக்கிறது. ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்க்க இதில் உள்ள வாய்ப்புகள் ஏராளம். ஆன்-லைன் வகுப்புகளில் நாள்தோறும் ஒரு மணிநேரம் மாணவர்களுடன் கலந்துரையாட முடிகிறது. ஆனால், வகுப்பறை நேரடி கல்வியின் போது வாரத்தில் மூன்று மணிநேரம் மாணவர்களை பார்ப்பதே அபூர்வம், என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.