உள்ளூர் செய்திகள்

குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி?: மாணவர்களுக்கு செயல் விளக்கம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுசூழல் மன்ற மாணவர்களுக்கு மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் முறை குறித்த செயல்விளக்கம் நடந்தது. சிவகாசி, ராஜபாளையம் ரவுண்ட் டேபிள் கிளப் சார்பில் நடந்த இதற்கு உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். கிளப் தலைவர் அஸ்வத் ராஜா முன்னிலை வகித்தார். சிவகாசி எக்ஸ்னோரா மதிப்புறு தலைவர் வெங்கட் ராஜ், தலைவர் பிரேமா, நிர்வாகிகள் கோமதி உட்பட பலர் பேசினர். சிவகாசி எக்ஸ்னோரா நிர்வாகி லதா பேசுகையில், "கம்பா எனப்படும் மண் பாத்திரத்தில் தினசரி வீடுகளில் கிடைக்கும் காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள் போன்ற மக்கும் குப்பையை சேமிக்கவேண்டும். இதில் உள்ள மூன்றடுக்குகளில் ஒன்றில் நிறைந்தவுடன் அதன்மேல் கெமிக்கல் பவுடர் தூவி, அடுத்த அடுக்கை பயன்படுத்தவேண்டும். நாட்கள் செல்ல மக்கும் குப்பை மூலம் இயற்கை உரம் தயாராகிவிடும். இதை வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். இயற்கை உரத்தை பயன்படுத்துவதால் செடிகள் நன்றாக வளரும். வீடுகளிலே உரம் தயாரித்த திருப்தி கிடைக்கும்" என்றார். சுற்றுசூழல் மன்ற பொறுப்பாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்