உள்ளூர் செய்திகள்

முன்னாள் பிரதமர்கள் குறித்து விமர்சனம்: பல்கலை தமிழ் பாடத்தில் சர்ச்சை

மதுரை: அழகப்பா பல்கலை தமிழ்த் துறை முதல் ஆண்டு பாடத்தில் முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் அத்வானியை விமர்சிக்கும் புதுக் கவிதை இடம் பெற்றுள்ளது. ஆபாசமாக வரிகள் காரைக்குடி அழகப்பா பல்கலையின் கீழ் அரசு, தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் தமிழ்த் துறை முதல் ஆண்டு மாணவர்களுக்கு கவிஞர் வாலி எழுதிய நிஜ கோவிந்தம் என்ற புதுக்கவிதை தொகுப்பு, ஒரு பாடமாக வைக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள கவிதையில் முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் அத்வானியை விமர்சித்தும்; தாம்பத்திய உறவு குறித்து ஆபாசமாகவும் வரிகள் இடம் பெற்றுள்ளன. நாற்காலி ஆசை என்ற கவிதையில் மசூதியை மண்ணில் சாய்த்ததில் மானக்கேடு... எனத் துவங்கி, இது நாலு காலிகளின் நாற்காலி ஆசை... எங்க ஊர் எலெக்ட்ரிக் ட்ரெயினில் ஹக்கீம் பாய், முத்துசாமி அய்யர், நேசமணி ஜோசப்... ஒரு சாத்துக்குடியை உரித்து மூவரும் சாப்பிட்டுக் கொண்டே... இதை அத்வானிக்கும், வாஜ்பாயிக்கும்... யார் சொல்வது? என முடிகிறது. ஜன சமுத்திரத்தில் ஒரு தீவாக... என்ற கவிதையில் இந்தியாவின் பொருளாதாரச் சிக்கல் பற்றி கூறப்பட்டுள்ளது. கூடை கூடையாய் கவலை; குடும்பம் க்யூபாவாக இருக்கிறது பொருளாதாரத் தடையில்; இருப்பது இந்தியாவா... எத்தியோப்பியாவா என்றெல்லாம் சந்தேகம். இவ்வளவு இருந்தும் நாங்கள் அவ்வப்போது சிரமப்பட்டு சிரிக்கிறோம் நரசிம்ம ராவைப் போல என உள்ளது. இந்தக் கவிதைகள் கல்வியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்