உள்ளூர் செய்திகள்

கல்லுாரிகளுக்கு இடையிலான ஆடவர் ஹாக்கிப் போட்டி: அமெரிக்கன் கல்லுாரி வெற்றி

மதுரை: காமராஜ் பல்கலை மண்டல சாம்பியன் கல்லுாரிகளுக்கு இடையிலான ஆடவர் ஹாக்கிப் போட்டிகள் அமெரிக்கன் கல்லுாரியில் நடந்தன. இறுதிப் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 3 - 1 கோல் கணக்கில் சவுராஷ்டிரா கல்லுாரி அணியை வீழ்த்தியது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி அணி 3 - 1 கோல் கணக்கில் சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லுாரி அணியை வீழ்த்தியது. இவான்ஜலின் ஹாக்கி: கோவை காருண்யா பல்கலை சார்பில் இவான்ஜலின் நினைவுக்கோப்பைக்கான தென்னிந்திய ஹாக்கி போட்டிகள் நடந்தன. காலிறுதி போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 2-0 கோல் கணக்கில் பாரதியார் பல்கலை அணியையும், அரையிறுதி போட்டியில் 4- 2 கோல் கணக்கில் காருண்யா பல்கலை அணியையும் வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் சென்னை லயோலா கல்லுாரி அணியை வீழ்த்தி கோப்பை மற்றும் ரூ.15ஆயிரம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்