உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலை அனைத்து இன்ஜி., கல்லுாரி மாணவியருக்கான ஹாக்கி போட்டி

கோவை: அண்ணா பல்கலை அனைத்து இன்ஜி., கல்லுாரி மாணவியருக்கான ஹாக்கி போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி 2வது இடம் பெற்றது. சென்னை அண்ணா பல்கலை அனைத்து மண்டல இன்ஜி., கல்லுாரி மாணவியருக்கான ஹாக்கி போட்டி, ராமநாதபுரம் சையத்அம்மாள் இன்ஜி., கல்லுாரியில் நடந்தது. இதில் அரைஇறுதி போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி 4-0 கோல் கணக்கில் திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜி.,கல்லுாரியை வென்றது. இறுதிப் போட்டியில், திருநெல்வேலி பி.எஸ்.என்., இன்ஜி., கல்லுாரி, 3-2 கோல் கணக்கில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்