கல்லுாரி அளவிலான ஆணழகன் போட்டியில் டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரிக்கு பதக்கம்
கீழ்ப்பாக்கம்: கல்லுாரி அளவிலான ஆணழகன் போட்டியில், டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரிக்கு, இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் பெற்றது. கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அதில், 65 கி.கி., எடை பிரிவில், சுரேந்தர் தங்கப்பதக்கம் பெற்றார். 75 கி.கி., எடை பிரிவில் பிரகாஷ் தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில், கார்த்திக் வெள்ளி பதக்கம் வென்றார். மூவரும் டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.