முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமி்ழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 868 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு தேர்வர்கள் 1:1 என்ற கணக்கில் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த பட்டியலும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் பினனர் வெளியிடப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.