உள்ளூர் செய்திகள்

கோவை மண்டல அளவில் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான தடகள போட்டி

கோவை: கோவை மண்டல அளவில் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான தடகள போட்டி, நேரு ஸ்டேடியத்தில் அசத்தலாக மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையுடன் துவங்கியது. அத்திப்பாளையம் ஸ்ரீரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், கோவை, பழனி, நீலகிரி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களிலுள்ள, 19 கல்லூரிகளை சேர்ந்த, 925 மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவு தடகள போட்டிகளில் தனித்தனியே பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள்: * மாணவர் பிரிவு: 5000மீ., ஓட்டம்- கோத்தகிரி என்.பி.ஏ.,கல்லூரி அஸ்வின், கோகுல், ஜி.ஆர்.ஜி.,கல்லூரி ஸ்ரீவிக்னேஷ்; 400மீ.,தடைதாண்டும் ஓட்டம்- ரியாஷ், சங்கரா கல்லூரி, ஸ்ரீபதி, ராமகிருஷ்ணா கல்லூரி சிசுபாலன்; குண்டு எறிதல்- கிருஷ்ணா கல்லூரி விக்னேஷ், நாராயணகுரு கல்லூரி சிவகுரு, ராமகிருஷ்ணா கல்லூரி சனத்குமார்; உயரம் தாண்டுதல்- பொள்ளாச்சி நாச்சிமுத்து கல்லூரி சுந்தரேஷ்வரன், ராமகிருஷ்ணா கல்லூரி அஸ்வின், ஒத்தகால்மண்டபம் கிறிஸ்து அரசர் கல்லூரி ஹரிகரன் ஆகியோர். * மாணவியர் பிரிவு: 1,500மீ., ஓட்டம்- நாச்சிமுத்து கல்லூரி சுவேதா, அரசு பெண்கள் கல்லூரி மணிபிரியா, சோபனா; உயரம் தாண்டுதல்- ஜி.ஆர்.ஜி., கல்லூரி சண்முக பிரியா, சவுமியா, நாச்சிமுத்து கல்லூரி பிரியதர்ஷினி; குண்டு எறிதல்- அரசு பெண்கள் கல்லூரி கோகிலராணி, ஸ்ரீரங்கநாதர் கல்லூரி சரண்யா, அரசு பெண்கள் கல்லூரி ஜெயபாரதி; 4*100மீ.,தொடர் ஓட்டம்- நாச்சிமுத்து, அரசு பெண்கள் கல்லூரி. பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களும், ஆண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களும் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்