உள்ளூர் செய்திகள்

பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது; தொடக்க கல்வி அலுவலர் ஆய்வு

திருவண்ணாமலை: ஆரணி அருகே, மழையால் பாதிக்கப்பட்டு, இடிந்து விழுந்த பள்ளி கட்டடத்தை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். ஆரணி அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம், மழை காரணமாக கடந்த, இரண்டு நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஆரணி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் துரையரசு, புருஷோத்தமன், தலைமை ஆசிரியர் பாண்டியன் ஆகியோருடன் சென்று, பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், துவக்க, நடுநிலைப் பள்ளியில் பயன்படுத்த முடியாத நிலையில், 42 கட்டடம் உள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. துந்தரீகம்பட்டு நடுநிலைப்பள்ளியில், மழையால் இடிந்து விழுந்த வகுப்பறை கட்டடத்திற்கு பதில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு, துவக்க கல்வி நன்றாக அமைந்தால்தான், உயர் கல்வியில் தேர்ச்சி சதவீதம் இருக்கும். எனவே, துவக்க கல்வி ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல், வாசித்தல், எழுதுதல், கணக்கு, ஆங்கில திறமையை வளர்க்க கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்