சர்வதேச பட்டியலில் ஒரு இந்திய கல்வி நிறுவனம் கூட இல்லை!
டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம், உலகின் தலைசிறந்த 200 சர்வதேச பல்கலை.,களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது. டாப் 200 உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளே அதிகம் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் மொத்தம் 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர்களின் தரம், சர்வதேச தரம், ஆய்வுகள் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கத்தார் பல்கலை., முதல் முறையாக இடம்பெற்றுள்ளது. டாப் 10 இடத்தில் லண்டன், ஹாங்காங், ஜெனீவா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இடம் பிடித்துள்ளன. டாப் 30 பல்கலை.,களின் பட்டியலில் லண்டனைச் சேர்ந்த 5 பல்கலை.,கள் இடம்பெற்றுள்ளன.