உள்ளூர் செய்திகள்

மாணவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: கவர்னர் தமிழிசை பேட்டி

திருத்தணி: நீட் தேர்வு விஷயத்தில், மாணவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை கூறினார்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த நல்லாட்டூரில், அவர் நேற்று அளித்த பேட்டி:நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு படித்து தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வால் பல ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவர்களாகும் நிலை உள்ளது. மாணவர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது. மருத்துவம் சார்ந்த படிப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த படிப்பு தான் என்றில்லை; பல்வேறு படிப்புகள் உள்ளன. அதை படித்து, மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த பதவிகளுக்கு வரலாம்.மற்றவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள், தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயமாகும். மருத்துவம் படிப்பதற்கு தனியார் பயிற்சி பள்ளிக்கு போக வேண்டிய கட்டாயம் இல்லை. எத்தனையோ மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமல், நீட் தேர்வை எழுதி சாதித்து காட்டியுள்ளனர். நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதனால், ஆளுங்கட்சியினர், மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்து, நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது சரியல்ல. மாணவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்