இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்: ஆஸி முன்னாள் ராணுவ அதிகாரி
இவை சாதாண குற்றச் செயல்களே என்று ஆஸ்திரேலிய அரசு கூறி வருவதையும் அவர் கண்டித்துள்ளார். கடந்த 18 மாதங்களாக இந்திய மாணவர்கள் மீது ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் ராணுவத் தளபதி பீட்டர் காஸ்கிரோவ், தி ஏஜ் என்ற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியர்கள் மீது நடப்பது இனவெறி தாக்குதலே என்று கூறியுள்ளார்.