உள்ளூர் செய்திகள்

தமிழக அரசின் சத்துணவு முட்டைகள் காரைக்காலில் மலிவு விலையில் விற்பனை

காரைக்கால்: தமிழக அரசு மூலம் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் சத்துணவு முட்டைகள், காரைக்காலில் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு மாநில அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வாரந்தோறும் மதிய உணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச முட்டைகளில் அடையாளம் வைத்து வழங்கப்படும்.இந்நிலையில் காரைக்கால் அடுத்துள்ள தமிழகப் பகுதியான திருக்கடையூர், பொறையார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சத்துணவு முட்டைகள் காரைக்காலில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாதாரணமாக முப்பது எண்ணிக்கை கொண்ட ஒரு தட்டு முட்டை ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது.தமிழக அரசு இலவச சத்துணவு முட்டை ஒரு தட்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. மலிவு விலையில் கிடைப்பதால் வியாபாரிகள் வாங்கிச்சென்று, கடைகளில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். தமிழக அரசு இலவசமாக மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவு முட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்