ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு காகித பொம்மை உருவாக்க பயிற்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு காகித பொம்மை தயாரிக்க செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.புதுச்சேரி மாவட்ட கலெக்டர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயன்படுத்திய காகிதங்களை கொண்டு பொம்மைகள் உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் துவக்க விழாவில், நிறுவன முதல்வர் சுகுணா சுகிர்தபாய், திடக்கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக பயன்படுத்திய காகிதங்களை மாற்று பொருளாக பயன்படுத்துவது குறித்தும், அவ்வாறு செய்வதின் மூலம், நமது பூமியின் வளத்தை சேமிப்பது குறித்தும் விளக்கினார்.ஆசிரியர் கிருஷ்ணன், மாணவர்களுக்கு காகித பொம்மையை உருவாக்கும் பயிற்சி அளித்தார். அவர் கற்றல் - கற்பித்தல் பொருளாக எப்படி பயன்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.இதில், பங்கு பெற்ற மாணவர்கள் அழகிய பொம்மைகளை உருவாக்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர் நடேசன் தணிகை மணி மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் செய்திருந்தனர்.