உள்ளூர் செய்திகள்

படிக்க, துாங்க முடியலையே; கவலையில் கதறும் கல்மேடு கிராம மக்கள்

மதுரை : ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி கல்மேடு பகுதியில் பல ஆண்டுகளாக முறையான மின் விநியோகம் இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கல்மேடு, கொண்டபெத்தான், களஞ்சியம், கருப்பிள்ளையேந்தல், இளமனுார், அன்னை சத்யா நகர் பகுதிகளில் துப்புரவு, கட்டட தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு ஓராண்டுக்கும் மேலாக இரவு நேரத்தில் மின்சாரம் குறைந்த அழுத்தத்தில் வினியோகமாகிறது. இதனால் இரவு முழுவதும் மக்கள் பல்வேறு பிரச்னைகளுடன் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மின்சாரம் இல்லாததால் மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இரவு நேரம் நிலா, டார்ச், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர். ஆண்டுக் கணக்கில் இப்பிரச்னை உள்ளதால், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்