உள்ளூர் செய்திகள்

விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது மதியீனத்தின் உச்சம்: பேராசிரியர் பாலகுருசாமி கண்டனம்

கோவை: விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வி திட்டத்தை ஊக்குவிக்கும் என்று கூறுவதும், சமூக நீதிக்கு ஊறு விளைவிக்கும் என்பதும் மதியீனத்தின் உச்சம் என்று, கல்வியாளர் பாலகுருசாமி கூறியுள்ளார்.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி அறிக்கை:பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டம், நாடு முழுக்க உள்ள பாரம்பரிய கைவினை தொழில் செய்வோரின் வாழ்வாதாரத்துக்கு வலுவூட்டும் நோக்கில் அமைந்து உள்ளது. ஒவ்வொருவரும் மேற்கொண்டுள்ள தொழில்களுக்கு உரிய மதிப்பு அளித்து, வாழ்வில் முன்னேற வழிவகை செய்துள்ளது.30 லட்சம் பேர்இத்திட்டத்துக்கு மத்திய அரசு, 13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தால் நம் நாட்டிலுள்ள, 18 வகையான பாரம்பரிய கைத்தொழில் மேற்கொள்ளும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுவர்.இது நிதி ஆதரவு, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதுடன், உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும். இத்திட்டத்தால், கைவினைஞர் மற்றும் கைத்தொழில் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் சேவைகள் உரியவர்களுக்கு போய் சேருவதுடன், தரமும் மேம்படும்.மேலும், உள்நாடு மற்றும் உலகளாவிய தொழில் பிணைப்பை ஒருங்கிணைக்கும். இத்திட்டம் கைவினைஞர்களையும், கைத்தொழில் வல்லுனர்களையும் கைதுாக்கிவிடும்.இத்திட்டம் திறம்பட அமல்படுத்துவதை உறுதி செய்ய, மத்திய அரசின் சிறு, குறு நடுத்தர தொழில் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றும் படி வங்கிகள் மற்றும் இதர நிதியுதவி அளிக்கும் நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.மேலும், சலுகை வட்டியில் கடனுதவி பெறவும் வழி வகை செய்துள்ளதால், கைவினைஞர்கள், கைத்தொழில் கலைஞர்களுக்கு, 5 சதவீத வட்டியில் 3 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி பெற முடியும்.இதற்கான முழு நிதி உதவியை மத்திய அரசே அளிக்கிறது. ஆனாலும், இத்திட்டம் சிறக்க மாநில அரசின் ஒத்துழைப்பு அவசியம்.இது, தமிழகத்திலுள்ள பல லட்சம் பேர் வாழ்வில் ஒளி ஏற்றும் திட்டம். ஆனால், பிரதமர் மோடியை எதிர்ப்பதையே குறியாக கொண்டுள்ள சிலரது பேச்சை கேட்டு, தமிழக அரசு இத்திட்டத்தை எதிர்ப்பது வருத்தத்தை அளிக்கிறது.இத்திட்டத்தையும், 1950ல் ராஜாஜி அறிமுகம் செய்த தொழில் கல்வித்திட்டத்தையும் ஒப்பிடுவது கேலிக்குரியது.பலன் மறுக்கப்படும்விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வித் திட்டத்தை ஊக்குவிக்கும் என்று கூறுவதும், சமூக நீதிக்கு ஊறு விளைவிக்கும் என்பதும் மதியீனத்தின் உச்சம் என கருத வேண்டியுள்ளது.இத்திட்டத்தை எதிர்க்கும் மாநிலம் தமிழகம் தான். இப்படி செய்வதால் தமிழகத்தில் கைவினைஞர்கள், கைத்தொழில் வல்லுனர்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த அற்புத திட்டத்தின் மூலம் கிடைக்கப்போகும் பலன்கள் மறுக்கப்படும்.இவ்வாறு பாலகுருசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்