உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலை சார்பில் போன்சாய் மரம் வளர்ப்பு பயிற்சி

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், போன்சாய் மரம் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மையத்தின் தலைவர் அசோக் வெளியிட்ட அறிக்கை:சென்னை, கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், டிச., 4ல், போன்சாய் எனும் அலங்காரத்துக்கான குட்டை மரங்கள் வளர்ப்பு; டிச., 5ல், காளாண் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.போன்சாய் மரம் வளர்ப்பில், அதற்கான காலநிலை, காரணிகள், உரம் இடும் முறைகள், தண்ணீர் ஊற்றும் அளவுகள் உள்ளிட்டவையும், காளாண் வளர்ப்பில் காளாண் படுக்கை அமைத்தல், தொற்று நீக்குதல், அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படும்.இதில், மாணவர்கள், மகளிர், சுய உதவிக்குழுவினர், தொழில் முனைவோர் உள்ளிட்டோர் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்