உள்ளூர் செய்திகள்

மதுரையில் டைடல் பார்க் அமைய வாய்ப்பு: மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பிப்பு

மாட்டுத்தாவணி: மாட்டுத்தாவணியில் 10 ஏக்கர் பரப்பில் ரூ.280 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் அமையவுள்ளது. 2022ல் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது சுறுசுறுப்படைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது. அதையடுத்து தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் 'இயக்க அனுமதி' கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் கட்டுமான பணிகள் துவங்க வாய்ப்புள்ளது.மாற்றமாஇதற்கிடையே சுற்றுச்சூழல் அனுமதியில் டைடல் பார்க் நிறுவனம் சில மாற்றங்களை செய்து மீண்டும் விண்ணப்பித்துள்ளதாகவும், அதனால் இத்திட்டம் மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியானது.டைடல் பார்க் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்திட்டத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையிலும் தான் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளோம். இயக்க அனுமதி கிடைத்து விட்டால் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடக்கும்.இவ்விழாவை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்