உள்ளூர் செய்திகள்

ராஜிவ்காந்தி அரசு கல்லுாரியில் கம்ப்யூட்டர் ஆய்வக கட்டடம் திறப்பு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி கலை கல்லுாரியில், 66.99 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கம்ப்யூட்டர் ஆய்வக கட்டட திறப்பு விழா நடந்தது.தேசிய உயர்கல்வி திட்ட நிதியின் மூலம், 66.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய கம்ப்யூட்டர் ஆய்வக கட்டடம் கட்டப்பட்டது.ஆய்வகத்தை, அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து, சிறப்புரையாற்றினர். அரசு உயர்கல்வி துறை இயக்குநர் அமன் ஷர்மா முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், தேசிய உயர்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக், கல்லுாரி முதல்வர் ஹென்னா மோனிஷா, கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, தேசிய உயர்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் உமா, பேராசிரியர் ஞானாம்பிகை, ஞானசேகர், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்