உள்ளூர் செய்திகள்

அரசு சார்பில் பிரதமரை சந்தித்து நிதி கோரலாம்: தினகரன் யோசனை

சென்னை: மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதியை பெற வேண்டும் என்றால், தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்தித்து நிதி கோரலாம் என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.அ.ம.மு.க., தலைமை அலுவலகம், சென்னை ராயப்பேட்டையில் இருந்து அடையாறுக்கு நேற்று மாற்றப்பட்டது. புதிய அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, தினகரன் அளித்த பேட்டி:மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவதாக ஒரு மொழி படிக்க வேண்டும் எனக் கூறுகிறது. தமிழக அரசு வேண்டாம் என்றால், இருமொழிக் கொள்கை போதும் என, அதை அரசியலாக்காமல் செயல்படுத்தலாம். அதற்கு பதில், ஆட்சி மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மடைமாற்றும் விதமாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.தமிழக அரசு, இதில் அரசியல் செய்ய வேண்டியதில்லை. அரசு பள்ளிகளில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும் என்பது, அனைவருடைய விருப்பம். மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை. மூன்றாவது மொழி படியுங்கள் என்கிறது.வேண்டாம் என்றால் விட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான். மாநில அரசு எதிர்த்தாலும், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மூன்றாவது மொழி படிக்கின்றனர்.தேசிய கல்விக் கொள்கையில் சேராவிட்டால், அதற்குரிய நிதியை பெற முடியாது என்று தான் மத்திய அமைச்சர் சொல்கிறார். மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதி பெற வேண்டும் என்றால், அதற்காக தமிழக அரசு தரப்பில் பிரதமரை சந்திக்கலாம்.தி.மு.க., தன் தவறுகளை மறைக்க, மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்