உள்ளூர் செய்திகள்

சிகரம் தொடுங்கள்! பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வாழ்த்து கூறி உள்ளார்.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி இன்று தொடங்கி, மார்ச் 25 வரை நடக்கிறது. 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ள இந்த தேர்வுக்காக 3,316 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.இந் நிலையில், பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வாழ்த்து கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 மற்றும் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்.இவ்வாறு விஜய் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்