ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
தர்மபுரி: தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பேரவை கூட்டம், தர்மபுரி அதியமான் அரசு பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். இதில், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதிய பணிக்காலத்தை முறைப்படுத்தி, அதற்கு உரிய பண பலன்களை வழங்க வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும். ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியாக ஒரு சட்ட முன்வடிவை உருவாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.