உள்ளூர் செய்திகள்

கோவையில் நாளை நடைபெறுகிறது ஆஸ்திரேலியாவின் கல்வி மற்றும் வர்த்தக திருவிழா

கோவை: இந்தியாவில் முதன்முறையாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கான ஆஸ்திரேலிய ஆணையமாகிய ஆஸ்டிரேட் (ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டுக் குழு), ஆஸ்திரேலியாவின் திருவிழா என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.இதில், ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் உணவுப் பொருள் துறையை ஒரே மேடையில் கொண்டுவருகிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் உயர்தர உணவுப் பொருட்கள் இந்திய நுகர்வோருக்கு அறிமுகமாகின்றன.முக்கிய அம்சங்கள்:*ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் நேரடி சந்திப்பு*கல்வி மற்றும் தொழில்துறை வல்லுநர்களால் வழங்கப்படும் மாஸ்டர் கிளாஸ்*ஆஸ்திரேலிய உயர்தர உணவுப் பொருட்கள் கண்காட்சி*ஆஸ்திரேலிய சமையல் சாமான்களைக் கொண்டு சமையல்கள்இந்த நிகழ்வின் மூன்றாவது கட்டம் நாளை (ஜூன் 20) கோயம்புத்தூரில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ்-ல் நடைபெறவுள்ளது. நிகழ்வு மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதன் பின்னர், ஜூன் 24ம் தேதி கொல்கத்தாவில் இந்த விழா நடைபெறுகிறது.மேலும் தகவல்களுக்கு: https://www.studyaustralia.gov.au


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்