உள்ளூர் செய்திகள்

ஐந்து மாதங்களாக சம்பளம் வரவில்லை தற்காலிக ஆசிரியர்கள் போராட முடிவு

சென்னை:தமிழகத்தில், ஆதிதிராவிடர் நல துவக்க பள்ளியில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு, ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்காததால், அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும், 1,138 பள்ளிகளில், 70,000க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், போதிய ஆசிரியர், உட்கட்டமைப்பு வசதி இல்லாதது போன்ற காரணங்களால், மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது.அதன்படி, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆதிதிராவிடர் நல பள்ளிகளில், ஒன்று அல்லது இரண்டு தற்காலிக ஆசிரியர்கள் மட்டும் பணியில் உள்ளனர்.இந்நிலையில், மயிலாடு துறை உட்பட பல்வேறு மாவட்டங்களில், ஆதி திராவிடர் நல துவக்க பள்ளிகளில் பணிபுரியும், தற்காலிக ஆசிரியர்களுக்கு, கடந்த ஐந்து மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.இது குறித்து, அவர்களில் சிலர் கூறியதாவது:கடந்த 2023ம் ஆண்டிற்கு பின், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்கள் தான் பாடம் எடுக்கிறோம். அரசு எங்களுக்கு ஊதியத்தை, முறையாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இது குறித்து, உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை. அரசு உடனடியாக, எங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்