உள்ளூர் செய்திகள்

விளாங்காடு பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை

சித்தாமூர்: விளாங்காடு அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்து பயன்பாடில்லாத கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.சித்தாமூர் அடுத்த விளாங்காடு கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது, இதில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.இதே வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டடம் விரிசல் அடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.பள்ளி குழந்தைகள் விளையாடும் போது, கட்டடம் இடிந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும்.எனவே விபத்து ஏற்படுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம், சேதமடைந்த கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்