உள்ளூர் செய்திகள்

நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் தேசிய, சர்வதேச சிலம்பத்தில் அசத்தல்

நாமக்கல்: தேசிய அளவிலான சிலம்ப போட்டி, மதுரை தனியார் பள்ளியில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு பள்ளியை சேர்ந்த மாணவர்கள், இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில், குறிஞ்சி பள்ளியின், 8ம் வகுப்பு மாணவி உமதுாலிகா, 5ம் வகுப்பு மாணவி ரோஷிணி, ஒற்றை கம்பு பிரிவில், தேசிய அளவில் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றனர். சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி, சென்னை தனியார் பள்ளியில் நடந்தது. உலக அளவில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.நாமக்கல் குறிஞ்சி பள்ளியின், 9ம் வகுப்பு மாணவர்கள் ரித்தீஷ் கண்ணன், அபிநீத், 7ம் வகுப்பு மாணவியர் பிரவஸ்தி, கனிஷ்கா ஹரிதா தொடுமுறை சிலம்ப பிரிவில், முதல் மற்றும் மூன்றாமிடம் பிடித்து பதக்கம் வென்றனர். தங்கம், வெண்கலம் வென்ற மாணவ மாணவியரை குறிஞ்சி பள்ளி தாளாளர் தங்கவேல் மற்றும் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்