பள்ளி லீக் கிரிக்கெட் பிரசித்தி வித்யோதயா ஏ அணி வெற்றி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சி.எஸ்.கே., சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான லீக் சுற்று கிரிக்கெட் அரையிறுதிப் போட்டிகள் ஆர்.வி.எஸ்., பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானங்களில் நடந்தது.அரையிறுதி போட்டி ஒட்டன்சந்திரம் பட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி 32.1 ஓவர்களில் 98 ரன்கள் (எஸ்.அஸ்ரங்கா 34, கே.நிகிலன் 3 விக்கெட்டுகள்) எடுத்து, ஆல் அவுட் ஆனது. எதிர்த்து விளையாடிய வேடசந்துார் கம்பைன்டு ஸ்கூல் அணி 21.2 ஓவர்களில் 99/1 ரன்கள் (ஆர்.கே.ஜஸ்வந்த் 51, நாட் அவுட்) எடுத்து, வெற்றி பெற்றது.திண்டுக்கல், கம்பைன்டு ஸ்கூல் அணி 34.1 ஓவர்களில் 152 ரன்கள் (எஸ்.கோபிநாத் பாண்டி 40, எம்.மலையாள சாமி 27, எஸ்.எம். நாட்ராய தருண் 3 விக்கெட்டுகள்) எடுத்து, ஆல் அவுட் ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா ஏ அணி 34.1 ஓவர்களில் 154/9 ரன்கள் (கே.முகமது பாஹீம் 50) எடுத்து வெற்றி பெற்றது.இறுதிப் போட்டி திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா ஏ அணி 45 ஓவர்களில் 299/8 ரன்கள் (கே.முகமது பாஹீம் 39, எஸ்.பி., தாஸ்வின் 101, நாட் அவுட்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய வேடசந்துார் கம்பைன்ஸ் ஸ்கூல் அணி 32.1 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது.