உள்ளூர் செய்திகள்

பி.கே.ஆர்., மகளிர் கலை கல்லுாரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பி.கே.ஆர்., மகளிர் கலைக்கல்லுாரி வளாகத்தில், நண்பர்கள் கல்வி அறக்கட்டளை சார்பாக, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் மோகனா வரவேற்றார்.கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பெற்றோரை இழந்த அல்லது ஒற்றை பெற்றோர் உடைய, 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் முறையாக நேர்காணல் நடத்தப்பட்டு அவர்களில், 130 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு, 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.நிகழ்வில், நண்பர்கள் கல்வி அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து, அதன் தலைவர் தினேஷ் சந்திரசேகரன் பேசினார். இந்நிகழ்வுகளை நடத்திட அனுமதி தந்த பி.கே.ஆர்., கல்வி நிறுவனத்திற்கும், இப்பணியை ஒருங்கிணைத்து சிறப்பாக செய்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மஞ்சுளா, சங்கரராமன், பேராசிரியர் ஸ்ரீநிதி உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சங்கர ராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்