காஞ்சி உதாசின் பாவாஜி மடத்தில் ஹிந்தி கற்க இலவச பயிற்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில் இலவசமாக ஹிந்தி கற்று கொடுக்கப்பட உள்ளது என, விஸ்வ ஹிந்து பரிஷத் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள உதாசின் பாவாஜி மடத்தில், மடாதிபதி கர்ஷினி அனுபவானந்த் ஏற்பாட்டின்படி, தினமும் மாலை 05:00 மணி முதல், இரவு 07:00 மணி வரை ஹிந்தி இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட உள்ளது.இதில், ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மற்றும் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் 80726 98884 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.