உள்ளூர் செய்திகள்

துணிகள் மிகத் துல்லிய ஆய்வு அக்கீரா கன்ட்ரோல்ஸ் புதிய தொழில்நுட்பம்

திருப்பூர்: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் இயங்கிவரும் அக்கீரா கன்ட்ரோல்ஸ் நிறுவனம், வெளிநாடுகளிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து, உள்நாட்டில் அதிநவீன தானியங்கி தொழில்நுட்பங்களை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது.இந்நிறுவனம், தொடர் ஆராய்ச்சிகள் வாயிலாக, ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு பலம் சேர்க்கும் வகையில், புதிய ஏ.ஐ., தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. திருமுருகன்பூண்டியில் நடைபெற்று வரும் நிட்டெக் கண்காட்சியில், அரங்கம் பி-46ல், அக்கீராவின் இந்த புதிய தொழில்நுட்பம் முழு இயக்க நிலையில், காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.கிடைத்த தீர்வு அக்கீரா கன்ட்ரோல்ஸ் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் பிரகாஷ் கூறியதாவது:துணியின் தரத்தை பொறுத்தே, ஆயத்த ஆடைகளின் தரம் அமைக்கிறது. தயாரிப்பின் போது துணிகளில் பல்வேறு வகையான தவறுகள், ஆடை உற்பத்தி துறையினரின் நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி, செலவினங்களையும் அதிகரிக்கச் செய்துவிடுகிறது.நிறுவனங்களில் தற்போது, துணியை டேபிளில் விரித்து, தொழிலாளர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. ஆட்டோமேட்டிக் துணி ஆய்வு செய்யும் இயந்திரங்கள் உள்ளன. அவற்றின் விலை மிக அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வாக, எங்கள் அக்கீரா கன்ட்ரோல்ஸ் நிறுவனத்தில், 'பேப்ரி - ஏ' என்கிற பெயரில், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கருவியை உருவாக்கியுள்ளோம்.நிமிடத்துக்கு 25 மீட்டர் ஐந்து அதிநவீன திறன் மிக்க கேமராக்களை கொண்ட இந்த கருவியை, விசைத்தறி, நிட்டிங் மெஷின், செக்கிங் டேபிள் என எந்த ஒரு இடத்திலும் பொருத்தலாம். அதிக திறன் மிக்க இந்த கேமராவின் கண்கள், துணிக்குள் ஆழமாக ஊடுருவிச் சென்று, குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்துவிடும். துணியில் எந்த இடத்தில் தவறு உள்ளது என்பதை, மார்க்கிங் செய்து கொடுத்துவிடும்.ஒரு நிமிடத்தில் 25 மீட்டர் துணியை ஆய்வு செய்யும் திறன் மிக்கது. ஆய்வு செய்யப்பட்ட துணியில் உள்ள குறைகளை, கம்ப்யூட்டர் ஸ்கிரீனிலும், எங்கிருந்தாலும் மொபைல் போனிலும் பார்வையிடலாம். தயாரிப்பின் போதே குறைபாடுகளை கண்டறிவதன் வாயிலாக, உடனடியாக சரி செய்து, துணி இழப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். இதனால், நேரம் சேமிக்கப்படுவதோடு, உற்பத்தி செலவினமும் குறைகிறது. இவ்வாறு, அவர் கூறினார். மேலும் விவரங்களுக்கு, 63857 13946 என்கிற எண்ணிலும், ce_fabria@akiracontrols.in என்கிற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்